தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது
Published on

சென்னை,

இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித் இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவித்துள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பத்திரமும் கொண்டது பாரதிய பாஷ விருது. வருகிற 1-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com