மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு

மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு
Published on

மழைநீரை சேகரிப்பது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்.இ.டி வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஒளிப்பரப்ப செய்யப்படவுள்ளது. கலெக்டா அலுவலக வளாகத்தில் புறப்பட்ட அந்த வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்க உள்ளதால் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விளக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்.இ.டி.வாகனத்தின் மூலம் கிராமங்கள் தோறும் மக்களுக்கு மழைநீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களை திரையிடும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனம் மூலம் ஏற்கனவே அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தினந்தோறும் குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. தற்போது மேலும் மழைநீரை சேமிப்பது குறித்த வீடியோக்களும் திரையிடப்படும், என்றார். மழைநீர் சேகரிப்பது குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி நிறைமதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com