செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு

அரக்கோணத்தில் மாணவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு
Published on

அரக்கோணம்

அரக்கோணத்தில் மாணவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

அரக்கோணத்தில் உள்ள இந்திய உணவு கழகம் குடோனில் மேல்பாக்கம் அரசு நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் மற்றும் தரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கோட்ட மேலாளர் ரத்தன் சிங் மீனா, கிடங்கு பொறுப்பாளர் ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது வேலூர் கோட்ட மேலாளர் ரத்தன்சிங்மீனா பேசுகையில், செறிவூட்டப்பட்ட அரிசி 61 ஆயிரத்து 831 டன் கையிருப்பில் உள்ளது. பண்டிகை காலங்களுக்கு தேவையான தானியங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பச்சரிசி கையிருப்பில் உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியை நாம் சாப்பிடுவதால் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இந்த விவரங்களை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரிவித்து செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை தெரிவிக்க வேண்டும். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படுகிறது. என்றார்.

நிகழ்ச்சியில் தர கட்டுப்பாட்டு அலுவலர் மோகன், மேலாளர்கள் தட்சிணாமூர்த்தி, அஜய்குமார் மற்றும் மேல்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன், கிடங்கு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com