விழிப்புணர்வு முகாம்

மூலைக்கரைப்பட்டி பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழிப்புணர்வு முகாம்
Published on

இட்டமொழி:

நெல்லை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. வியாபாரிகளின் கடைகள்தோறும் விழிப்புணர்வு சம்பந்தமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கு.பார்வதிமோகன், செயல் அலுவலர் லவ்லின் மேபா, பணி மேற்பார்வையாளர்கள் கலையரசி, கார்த்திக், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com