விழிப்புணர்வு முகாம்

சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழிப்புணர்வு முகாம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்து சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகரசபை தலைவி உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. மேலும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏடுக்கப்பட்டது. தொடர்ந்து பஸ் நிலையம் அருகே குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிமுத்து, மாரிசாமி, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com