வங்கிக்கடன் வசதிகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

கால்நடை வளர்ப்புக்கு வங்கிக்கடன் வசதிகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
வங்கிக்கடன் வசதிகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
Published on

நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வருகிற 25-ந் தேதி கால்நடை வளர்ப்புக்கான வங்கிக்கடன் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் மாடு, ஆடு, கோழி வளர்ப்பில் உள்ள பல்வேறு கடன் திட்டங்களை பற்றி பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பிற்கு வங்கி கடன் பெற வழிவகை செய்யும் தேசிய கால்நடை இயக்கம், மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com