விழிப்புணர்வு பிரசாரம்

புளியங்குடியில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
விழிப்புணர்வு பிரசாரம்
Published on

புளியங்குடி:

புளியங்குடி நகராட்சி தூய்மைப்பணி சிறப்பு நிகழ்வாக மக்களிடையே 'தூய்மையே சேவை' என்னும் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தூய்மை பணி நடைபெற்றது. புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜயா சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பணியை தொடங்கினர். பின்னர் நகராட்சி சார்பில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தூய்மை இந்தியா இயக்க பணியாளர்கள், கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com