விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

நெல்லையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
Published on

தேசிய கண்தான இருவார விழாவையொட்டி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் கண்தான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ராமலட்சுமி வரவேற்றார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இதில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஆறுமுகம், கண் சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் ஆனந்தி, டாக்டர்கள் ரீட்டா, உமா, கவிதா, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், உடல் உறுப்புதான மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com