ஆண்டிப்பட்டி அருகே விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ஆண்டிப்பட்டி அருகே குழந்தை திருமணம் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி அருகே விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
Published on

தேனி மாவட்ட சமூக நலத்துறை, ஆண்டிப்பட்டி ஆரோக்கிய அகம் மற்றும் தேக்கம்பட்டி ஊராட்சி சார்பில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் குழந்தை திருமணம் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா ஜெயக்கொடி தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் அருணா, ஆரோக்கிய அகம் துணை இயக்குனர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகராஜ், சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தேக்கம்பட்டியில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக அடைக்கம்பட்டி வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த சைக்கிள் ஊர்வலத்தின்போது, குழந்தைகள் திருமணத்தால் ஏற்படும் தீமைகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு இடைநிறுத்தம் இன்றி மாணவிகள் படிப்பை தொடர்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் குழந்தைகள் திட்ட பணியாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரிகா செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com