

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல தபால்துறை சார்பில் அஞ்சல்துறையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அஞ்சல் அட்டகாசம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கொலு கண்காட்சி தலைமை தபால் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அஞ்சல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், கடந்த காலங்களில் அச்சிடப்பட்ட தபால் தலைகள், தபால்கார்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொலுவை மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி தொடங்கி வைத்தார். வருகிற 24-ந் தேதி வரை இந்த கொலு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். 12 மண்டலங்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கொலுவுக்கு விருது வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் தலைமை தபால் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவை பார்வையிட்டு தபால்துறையின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால சேவைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று தAwareness killing exhibition on postal services at Head Post Officeபால்துறை உதவி இயக்குனர் கலைவாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.