கையில் தேசியக்கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம்

கையில் தேசியக்கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கையில் தேசியக்கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவது குறித்து தபால் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திலகர் திடல் வழியாக சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது. இதில் தபால் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் கையில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்திற்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தலைமை தாங்கி, பள்ளி மாணவ-மாணவிகளிடம் சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் புதுக்கோட்டை தபால் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் கடந்த ஆண்டு 15 ஆயிரத்திற்கும் மேலான தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டதாக கூறினார். தேசியக்கொடி ரூ.25-க்கு அனைத்து கிளை துணை தபால் நிலையங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com