புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

ஓச்சேரியில் ஓச்சேரியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
Published on

ஓச்சேரியில் அவளூர் போலீசார் சார்பில் நேற்று புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை கடைகளில் விற்றால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், உடல் நலத்தை கெடுக்கும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று போலீசார் சார்பில் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் வியாபாரிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com