சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று (27.03.2026) பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.ஆர்.நகர், மார்க்கெட் பகுதி, தண்டையார்பேட்டை பிரதான சாலையில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பின்னர், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கப் பலகையில் வாக்காளர்கள் கையொப்பமிட்டனர்.

இதேப் போன்று, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் விளையாட்டுத் தீடல் பகுதியில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தப்பாட்டம், கரகாட்டம், வாக்காளிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com