பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி
Published on

அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான விழிப்புணர்வு ஓவிய போட்டி, அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி, மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழியை கலெக்டர் வாசிக்க அனைத்து அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com