அரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

கடையநல்லூர்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மழை காலத்தின்போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்குபவர்களையும் மீட்பது எப்படி? திடீரென ஏற்படும் தீயை அணைப்பது எப்படி? அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் தீ தடுப்பு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், கல்லூரி பேராசிரியர்கள் குருசித்திர சண்முகபாரதி. சண்முகப்பிரியா, சாம்சன் லாரன்ஸ், சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com