குலசேகரன்பட்டினத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குலசேகரன்பட்டினத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

குலசேகரன்பட்டினம்:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் பொதுமக்களிடம் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கடற்கரை பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது, கிராமங்களில் சாதி அடையாளங்களை அழிக்க வேண்டும், போதைப்பொருட்கள் கடத்தல், புகையிலை பொருட்கள் கடத்தல், சமூக விரோதிகளின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கவும், போதைபொருட்கள் பயன்படுத்துவதை இளைஞர்கள் முற்றிலுமாக தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com