சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகையில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

நாகை ஏ.டி.எம். அனைத்து மகளிர் கல்லூரியில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி கூறுகையில், வங்கி தொடர்பாக செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.எண்னை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். சமூக ஊடகங்களில் முகம் தெரியாதவர்களிடம் நெருங்கி பழகுவது மிகவும் ஆபத்தானது என்றார். இதில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com