

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிவுரையின் படி வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா குமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும சைபர்கிரைம் உதவி எண்: 1930, www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் 350 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.