

திட்டச்சேரி:
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார். டாக்டர் ராதாகிருஷ்ணன், கருத்துரையாளர் முகமது எஹையா, நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன், துணைத் தலைவர் இறையன்பு மற்றும் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்வி ஆர்வலர்கள் பக்ருதீன், ஹாஜா, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.