விழிப்புணர்வு நடைபயணம்

காவேரிப்பட்டணம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நடைபயணம்
Published on

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா 12-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் பனகல் தெரு, அரசமரத்து தெரு, அம்பேத்கர் நகர், பாலக்கோடு கூட்ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மனோகரன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com