வண்ணத்துப்பூச்சி பூங்காவில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக வன உயிரின வார விழாவையொட்டி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வண்ணத்துப்பூச்சி பூங்காவில் விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

திருச்சி வன கோட்ட தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி மினி உயிரியல் பூங்கா உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் தலைமையில் உலக வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஓவியம், கட்டுரை, வினாடி-வினா பாட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வன பணியாளர்களுடன் பிளாஸ்டிக்கை பயன்பாட்டை தவிர்க்க ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், மேரி லின்சி, உசைன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பறவைகள் ஆர்வலர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வனவர் தாமோதரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com