தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

வந்தவாசி

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தாசில்தார் பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் தாலுகா அலுவலக ரோடு, காஞ்சீபுரம் சாலை, பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை, பழைய பஸ் நிலையம் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் அனைவரும் அறிய வேண்டிய கட்டாய தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

இதில் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்கள், துணை தாசில்தார் சரவணன், வெங்கடேசன், மணி, பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com