தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை தாசில்தார் மனோகரன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

இதில் வனத்துறை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தலைமையிடத்து துணை தாசில்தார் ஜீவா, வட்ட வழங்கல் அலுவலர் அருள், ஆய்வாளர்கள் பாலு, பெரியார் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com