திருவாரூரில், விழிப்புணர்வு ஊர்வலம் - புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு விழாவையொட்டி திருவாரூரில் நடந்த விழிப்புணாவு ஊர்வலம் மற்றும் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
திருவாரூரில், விழிப்புணர்வு ஊர்வலம் - புகைப்பட கண்காட்சி
Published on

திருவாரூர்;

தமிழ்நாடு விழாவையொட்டி திருவாரூரில் நடந்த விழிப்புணாவு ஊர்வலம் மற்றும் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

விழிப்புணாவு ஊர்வலம்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.ஊர்வலத்தை கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சு-கட்டுரை போட்டி

தொடர்ந்து, திருவாரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு குறித்த நிலவியல் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததை மாணவ-மாணவிகள் பார்த்தனர். மேலும் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருவாரூர் நகராட்சி அலுவலக வளாக்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் கனகலெட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாரயணன், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், திருவாரூர் நகராட்சி மேலாளர் முத்துகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், சங்கர் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனா. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com