அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: தண்டனை பெற்ற 3 பேர் மேல்முறையீடு - ஐகோர்ட்டு நோட்டீஸ்

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: தண்டனை பெற்ற 3 பேர் மேல்முறையீடு - ஐகோர்ட்டு நோட்டீஸ்
Published on

சென்னை,

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கடந்த 3-ந்தேதி சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து உமாபதி என்பவர் ஏற்கனவே மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், 5 ஆண்டு தண்டனையை பெற்ற லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகிய இருவரும் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர், 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களுக்கு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com