

சென்னை,
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பாபு என்பவர் விசாரணை காலத்தில் சிறையிலேயே இறந்துவிட்டதால், மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் கடந்த 3-ந் தேதி தீர்ப்பு கூறிய சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் என்பவரை மட்டும் விடுதலை செய்தது.
மீதமுள்ள 15 பேரில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உமாபதி, தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரிய குற்றவாளி உமாபதியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த ஐகோர்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.