ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைமைச் செயலகத்தில் ஒலித்த தீ எச்சரிக்கை அலாரம்

சாமி படங்களுக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தனர்.
தலைமை செயலகம்
Published on: 

சென்னை,

ஆயுத பூஜை வரும் 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இடையில் வரும் 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்

இதற்காக அந்தந்த அலுவலக வாசல்களில் கோலமிட்டு, பூக்களை வைத்து அலங்காரங்களை மேற்கொண்டிருந்தனர். மேலும் சாமி படங்களுக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தனர்.

எச்சரிக்கை அலாரம்

ஆனால் தலைமைச் செயலகம் பிரதான கட்டிட தரைத்தளத்தில் 4-ம் நுழைவு வாயில் அருகே உள்ள அலுவலகம் ஒன்றில், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு ஊழியர்கள் கற்பூரம் ஏற்றி தீபம் காட்டினர். அப்போது கற்பூரத்தில் இருந்து வெளியான புகை காரணமாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த தீ விபத்து எச்சரிக்கை அலாரம் திடீரென சத்தமாக ஒலித்தது.

தலைமைச் செயலகத்தில் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அங்கிருந்த ஊழியர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கற்பூரத்தில் இருந்து வந்த புகை காரணமாகவே அலாரம் ஒலித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com