ஆயுதபூஜை ஸ்பெஷல்: சென்னை - காரைக்குடி இடையே சிறப்பு ரெயில்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சிறப்பு ரெயில்
Published on: 

சென்னை,

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னை - காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை - காரைக்குடி

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06037) அதேநாள் இரவு 11.45 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து அக்டோபர் 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06038) மறுநாள் காலை 8 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

முன்பதிவு நாளை தொடக்கம்

17 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர் (கடலூர்), சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்குடி, நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com