ஆயுதபூஜை ஸ்பெஷல்: தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஆயுதபூஜை ஸ்பெஷல்: தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயில்
Published on: 

சென்னை,

ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம் - சந்திரகாச்சி (மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா அருகே உள்ளது), சந்திரகாச்சி - சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாம்பரத்தில் இருந்து

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06087) 3-வது நாள் காலை 7.45 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.

சந்திரகாச்சியில் இருந்து

மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து அக்டோபர் 18-ந் தேதி காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06088) மறுநாள் இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைகிறது.

டிக்கெட் முன்பதிவு

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com