ஆயுத பூஜை: பெங்களூரு- தூத்துக்குடி இடையே இன்று சிறப்பு ரெயில்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆயுத பூஜை: பெங்களூரு- தூத்துக்குடி இடையே இன்று சிறப்பு ரெயில்
Published on: 

சேலம்,

ஆயுத பூஜையை முன்னிட்டு பெங்களூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் சேலம் வழியாக இன்று (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.

பெங்களூரு-தூத்துக்குடி

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூரு கன்டோன்மென்ட்-தூத்துக்குடி, எஸ்.எம்.வி.டி.பெங்களூரு-கண்ணூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட்-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06533) இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு ஓசூர், தர்மபுரி வழியாக நாளை அதிகாலை 3.20 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 3.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில். தூத்துக்குடி-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06534) நாளை (சனிக்கிழமை) மதியம் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இரவு 9.45 மணிக்கு சேலம் வந்தடைகிறது. இங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஒசூர் வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடைகிறது.

சிறப்பு ரெயில்

இதேபோல் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் (06545) நாளை நள்ளிரவு 12.05 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஒயிட்பீல்டு, பங் காருபேட்டை, குப்பம் வழியாக அதிகாலை 5.07 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 5.10 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06546) நாளை மாலை 6.25 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதிகாலை 3.17 மணிக்கு சேலம் வந்தடைகிறது. இங்கிருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு குப்பம். பங்காருபேட்டை வழியாக காலை 9.45 மணிக்கு பெங்களூரு கன்டோன் மென்ட் சென்றடைகிறது.

இந்தத் தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com