தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்துகள் - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நம் ஒவ்வொரு செயலிலும் அறிவாகவும் ஆற்றலாகவும் திகழும் அன்னை சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்து, தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக அமையவும், அன்பும் ஞானமும் திகழவும், அனைவரும் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ அன்னையின் அருளை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com