பா.சிவந்தி ஆதித்தனார் 91-வது பிறந்த நாள் விழா - சிறப்பாக கொண்டாடிய பள்ளி, கல்லூரி மாணவர்கள்

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பா.சிவந்தி ஆதித்தனார் 91-வது பிறந்த நாள் விழா - சிறப்பாக கொண்டாடிய  பள்ளி, கல்லூரி மாணவர்கள்
Published on

சென்னை,

சென்னை புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடியது.

பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்த நாள்

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்த நாளான இன்று, சென்னை புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடியது. விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்கம், காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார்.

மாலை அணிவித்து மரியாதை

பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் ஆர்.செல்வகுமார், துணைத் தலைவர் ஏ.சிற்றம்பலம், செயலாளர் ஏ.பிரபுராம், செயற்குழு உறுப்பினர் கே.மாணிக்கம், கல்விக்குழு உறுப்பினர் வி.டி.சி.செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டு, சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பா.சிவந்தி ஆதித்தனார் போலவே வேடம்

பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் மாணவர்கள் பா.சிவந்தி ஆதித்தனார் போலவே வேடமணிந்து வந்து அசத்தினார்கள். கலை நிகழ்ச்சிகளுடன் பேச்சு போட்டியும் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி, பள்ளியின் முதல்வர் பி.என்.அசோக்குமார், துணை முதல்வர் எச்.ராஜராஜேஸ்வரி உள்பட கல்லூரி - பள்ளியை சேர்ந்த அனைத்து ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டனர். நிறைவாக, மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com