

மானாமதுரை
மானாமதுரை சமத்துவபுரத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி வளைகாப்பை நடத்தினார். கர்ப்பிணிகளுக்கு வளையல், ஜாக்கெட் துணி, சில்வர் தட்டு மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் 5 வகையான சாதங்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி, செய்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்ரமணி, மானாமதுரை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.