‘கிரீமிலேயர்’ விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

‘கிரீமிலேயர்’ விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘கிரீமிலேயர்’ விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

கிரீமிலேயர் வரம்பை கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்று 1993-ம் ஆண்டு மத்தியஅரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த சமூகநீதிக்கு எதிரான செயலுக்கு பா.ம.க. தான் முதலில் கடும் எதிர்ப்புதெரிவித்தது. அரசியல் சட்ட அமைப்பாக வலிமையானதாக மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கிரீமிலேயர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை இன்னும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.

ஆனால், ஆணையம் கடமை தவறிவிட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பதுதான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணி ஆகும். இதை உணர்ந்து கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்கவேண்டும் என்ற மத்தியஅரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன்மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதை உறுதிசெய்யவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com