கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் இந்தியா கூட்டணியை பலப்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் இந்தியா கூட்டணியை பலப்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. தேர்தல் பிரசார பணிகளுக்காக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, ஜூன் 2ம் தேதி சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நமது 'இந்தியா' கூட்டணியை பலப்படுத்துகிறது. கெஜ்ரிவாலை விடுவித்தது நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி 'இந்தியா' கூட்டணிக்கும் பலம் தந்துள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com