

வாணியம்பாடியில் கஞ்சா பதுக்கல் கும்பலால் 2021-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் வசீம் அக்ரம் வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் மற்றும் அவரது கூட்டாளி பைசல் அஹமது ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் டீல் இம்தியாஸ் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இவர் மீண்டும் பல்வேறு சமூக வலைதளங்களில் ஆயுதங்கள் ஏந்தி நிற்பதை போலவும், ஆயுதங்களை காட்டி மிரட்டுவது போலவும் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதனை அடுத்து வாணியம்பாடி நகர போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி நேற்று டீல் இம்தியாசை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.