பக்ரீத், வார விடுமுறை: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்
பக்ரீத், வார விடுமுறை: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

தென்காசி,

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும்.

இந்நிலையில் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் குற்றாலம் மெயின் அருவியில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com