பக்ரீத் பண்டிகை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்
பக்ரீத் பண்டிகை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 முதல் 8 மணி மற்றும் பகல் 11 முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com