தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை

தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்புல்லாணி யூனியன் கூட்டத்தில் தலைவர் புல்லாணி தெரிவித்தார்.
தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை
Published on

தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்புல்லாணி யூனியன் கூட்டத்தில் தலைவர் புல்லாணி தெரிவித்தார்.

சீரான குடிநீர்

திருப்புல்லாணி யூனியன் கூட்டம் அதன் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம், ஆணையாளர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் லாந்தை சரளாதேவி, மல்லல் ரஞ்சனி, பத்திராதரவை முனியாயி, ரெகுநாதபுரம் நாகநாதன், பெரியபட்டினம் பைரோஸ்கான், திருப்புல்லாணி கலாராணி, காஞ்சிரங்குடி கோவிந்தமூர்த்தி, தில்லையேந்தல் கருத்தமுத்து, திரு உத்தரகோசமங்கை திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வார்டு மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது தலைவர் புல்லாணி கூறியதாவது:- தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் சீரான குடிநீர் வினியோகம் வழங்குவதை யூனியன் ஆணையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உரிய நடவடிக்கை

மேலும், பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராம பகுதிகளிலும் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்படக்கூடாது. அதற்கேற்ப மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து சென்று அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com