முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

தா.பழூரில் முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூர் எமனேரி கரையில் பிரசித்தி பெற்ற மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி, பூங்கரகம் எடுத்து ராஜவீதி வழியாக முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுதோறும் தீபாராதனை செய்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com