பிடாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாம்பழப்பட்டு பிடாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பிடாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
Published on

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பிடாரியம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பழங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com