முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனதூர் காலனி தெருவில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூங்கரகம் மற்றும் பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மதனத்தூர் கொள்ளிடக்கரையிலிருந்து பூங்கரகம், அக்னி கரகம் மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com