சாலையோரம் வீசப்படும் கோழிக்கழிவுகள்

சாலையோரம் வீசப்படும் கோழிக்கழிவுகள்

Published on

பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக புதைக்காமல் வாய்க்கால்கள், ரோட்டோரங்களில் உள்ளிட்டவற்றில் வீசி சென்றுவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல், ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com