சென்னையில் பலூன் திருவிழா; நீண்ட நேரம் காத்திருந்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்

நீண்ட நேரம் காத்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னையில் பலூன் திருவிழா; நீண்ட நேரம் காத்திருந்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்
Published on

சென்னை,

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

இதன்படி சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 10-ந்தேதி(இன்று) முதல் 12-ந்தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.

இந்த நிலையில், சென்னை பலூன் திருவிழாவை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மதியம் 3 மணி முதல், பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் டிக்கெட் வாங்கி ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பலூன்களை பறக்க விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் முயற்சி செய்த பிறகும், பலூன்களை பறக்கவிடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அங்கு காத்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com