ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டி இன்று சென்னை வருகை...!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டி இன்று சென்னை வருகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டி இன்று சென்னை வருகை...!
Published on

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக சட்டப்பேரவை செயலகம் முழு வீச்சில் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com