வழிகாட்டி பலகையை மறைத்திருக்கும் மூங்கில் செடிகள்

வழிகாட்டி பலகையை மறைத்திருக்கும் மூங்கில் செடிகள்
வழிகாட்டி பலகையை மறைத்திருக்கும் மூங்கில் செடிகள்
Published on

பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகையை மறைத்திருக்கும் மூங்கில் செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழிகாட்டி பலகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு துவரங்குறிச்சி வழியாக தான் பஸ்கள் செல்கிறது. மேற்கண்ட பகுதிகளில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அதே வழியாக தான் பஸ்கள் வரவேண்டும். பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துவரங்குறிச்சி அருகே கள்ளிக்காடு பகுதியில் நெடுஞ்சாலையில் வரும்போது, அந்த பகுதியில் நாட்டுச்சாலைக்கு தனியாக ஒரு பாதையும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டைக்கு, தனித்தனியாக 2 பாதைகளும் செல்லும். நெடுஞ்சாலை துறை சார்பில் அந்த பாதையில் வாகன ஓட்டிகள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மூங்கில் செடிகளை அகற்ற வேண்டும்

இந்த வழிகாட்டி பலகை மூலம் பட்டுக்கோட்டைக்கு வருபவர்களும், தஞ்சாவூருக்கு செல்பவர்களும் சிரமம் இல்லாமல் சென்று வந்தனர். தற்போது மூங்கில் செடிகள் வளர்ந்து வழிகாட்டி பலகை இருப்பது தெரியாத அளவிற்கு மறைத்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, முத்துப்பேட்டையில் இருந்து வருபவர்கள் வழிகாட்டி பலகை தெரியாததால் எங்கு செல்லவேண்டும் என தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக வழிகாட்டி பலகையை மறைத்திருக்கும் மூங்கில் செடிகளை அகற்ற வண்டும். மேலும் வாகன ஓட்டிகள் குழப்பம் இல்லாமல் தங்களது ஊருக்கு சென்று வர நடவடிக்க எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com