3 மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் -கி.வீரமணி

3 மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் கி.வீரமணி வலியுறுத்தல்.
3 மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் -கி.வீரமணி
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு- மருத்துவ துறையிலும், மருத்துவ கல்வியிலும் வளர்ந்து வரும் ஓர் எடுத்துக்காட்டான மாநிலமாகும். இந்த நிலையில், மருத்துவ கவுன்சில் ஆய்வு குழுவினர் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு இவ்வாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் அதிர்ச்சி தரும் ஆணையாகும். இந்த முடிவினை மறுசீராய்வு செய்வது அவசியம்.

இது சமூகத்தின் எதிர்காலத்தை, மருத்துவ வளர்ச்சியைப் பாதிக்கும் நிகழ்வு. எனவே, மறுபரிசீலனை செய்து மனிதாபிமானத்தின் அடிப்படையில் முடிவுகள் வருவது அவசியம், அவசரம். மருத்துவ கல்லூரிகளின் சில தவறுகளுக்கு, சமூகமும், எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக்கூடாது என்ற சமூக கவலையில்தான் நாம் இதனை குழுவினருக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.

குற்றங்கள் வேறு, குறைகள் வேறு, பிழைகள் வேறு. குறைகள் திருத்தப்படவேண்டியவை. இங்கே குற்றம் நடக்கவில்லை, குறைகள்தான் இருந்துள்ளன. எனவே, நிவர்த்தி செய்திட வாய்ப்பு தந்து, தடையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com