மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

தொடர்ந்து 12-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவி
கோப்புப்படம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

தென்மேற்கு பருவமழை

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

தடை நீட்டிப்பு

மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 12-வது நாளாக இன்றும், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருவியை பார்ப்பதற்கு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட்டு சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com