மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

பொதுமக்கள் அருவியின் இயற்கை அழகை பார்வையிட மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
மணிமுத்தாறு அருவி
Published on: 

நெல்லை,

மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியின் இயற்கை அழகை பார்வையிட மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com