நீலகிரியில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தளங்களில் கண்காட்சி பணிகள் நடைபெற்றதாலும் தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களில் ஏப்ரல் முதல் ஜீன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டகலை துறை தடைவிதித்து இருந்தது.

கோடை சீசன் நிறைவடைந்ததால் படப்பிடிப்பிற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்பிற்கு அனுமதி தேவைப்படுபவர்கள் தோட்டகலை அலுவலகத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com